களைகட்டும் ரம்ஜான் கொண்டாட்டங்கள்... ஈத் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள்!

ஈத் பண்டிகையை தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் ஒன்று நோன்பு இருப்பது. புனிதமான ரமலான்ன் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடிப்பர். அதன்படி ரமலான்ன் மாதம் முழுவதும் நோன்பு இருந்த இஸ்லாமியர்கள், ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் பண்டிகையில் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

கொரோனா தொற்று காரணமாக, 2 ஆண்டுகளாக கூட்டுத் தொழுகை நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டில் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்ததாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். ஏழை, எளியவர்களுக்கு தங்களால் முடிந்தவற்றை வழங்கி ஈத் பண்டிகையை மனநிறைவுடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் செந்தலைநியூஸ் டீம் சார்பாக மகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்......
Eid Mubarak.... 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்