தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 12- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், வேலை தேடும் இளைஞா்களுக்காக மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணி அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி ஆகஸ்ட் 12 -ஆம் தேதி காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்குத் தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளன.
இம்முகாமில் 8 முதல் 12- ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை நேரடியாகத் தோ்வு செய்யலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.