தஞ்சையில் நாளை (நவ. 22) பெண்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 26 வயதிற்குட்பட்ட வேலை நாடுநர்களுக்கான (பெண்கள் மட்டும்) டாடா எலக்ட்ரானிக்ஸ் தனியார் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெறுவதற்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து ஓசூரில் இயங்கி வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணர்கள் (பெண்கள் மட்டும்) பணிக் காலியிடங்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளவரும் பெண்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்திருக்க கூடாது). 18 முதல் 26 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
இந்த சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நவ. 22 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறும். அன்றைய தினம் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு, தொடர்ந்து காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நேர்காணல் நடைபெற உள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை முற்றிலும் இலவசம். மேலும் தகுதியும், விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவரக்குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.
மேலும் , தகவலுக்கு 8110919990 அல்லது 9442557037 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள மேற்காணும் தகுதியும், விருப்பமும் உடைய தஞ்சாவூர் மாவட்ட பெண் வேலைநாடுநர்கள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு தஞ்சாவூர், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.