தஞ்சை உட்பட 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

20 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி துறையின் டிஜிபியாக இருந்த, ஐபிஎஸ் அதிகாரி ஆபாஷ் குமார், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்ப்புப் பணிகள் துறையின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக, ஐபிஎஸ் அதிகாரி ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி செந்தில்குமாரும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி கலைசெல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்டீபனும், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சிவக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ரவளி பிரியா சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 20 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்