செந்தலையில் இஸ்லாமிய ஸ்போர்ட்ஸ் கிளப்  சார்பாக நடந்த கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

செந்தலையில் இஸ்லாமிய ஸ்போர்ட்ஸ் கிளப்  சார்பில் நடைபெற்ற கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலைப்பட்டினத்தில் இஸ்லாமிய ஸ்போர்ட்ஸ் கிளப்  சார்பாக நடத்தப்பட்ட 8 - ஆம் ஆண்டு சூழற்கோப்பைக்கான கபாடி போட்டி கடந்த சனி மற்றும் நேற்று ஞாயிற்று கிழமை செந்தலை அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியினை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் N. அசோக்குமார் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் துவக்கி வைத்தனர்,
இரண்டாம் சுற்று ஆட்டத்டை சேதுபாவாசத்திரம் ஒன்றிய தாவெக - வின் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்,
இறுதிச்சுற்று ஆட்டத்தை செந்தலைப்பட்டினம் பொதுநல சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.


இப் போட்டியில் சுமார் 32 அணிகள் பங்கு பெற்றது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் எம் எல் பி மந்திரிப்பட்டினம் அணி செந்தலை SISC அணிகள் போட்டியிட்டன இதில் செந்தலை SISC அணி வென்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற கபாடி அணிகளுக்கு, சுழற்கோப்பையுடன் பரிசு தொகையும் வீரர்களுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது.

முதல் பரிசு செந்தலை அணிக்கு ரூ. 20,026 
ழ பவுண்டேசன் சார்பாக வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு மந்திரிப்பட்டினம் எம் எல் பி அணிக்கு ரூ. 15,026  F.முகமது மீராசா அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது.
மூன்றாம் பரிசு எட்டுப்புளிகாடு அணிக்கு ரூ. 10,026 v.ஜெயபிரகாஷ் மற்றும் சுந்தர தமிழ் ஜெயபிரகாஷ் சார்பாக வழங்கப்பட்டது.
நான்காம் பரிசு மயிலாடுதுறை அணிக்கு ரூ.8,026 S. ஹபிப்ரகுமான் அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது. 

முதல் பரிசு: செந்தலை இஸ்லாமிக் ஸ்போர்ட்ஸ் கிளப்

இரண்டாம் பரிசு: எம் எல் பி மந்திரிபட்டினம்

மூன்றாம் பரிசு: எட்டுப்புளிகாடு அணி

நான்காம் பரிசு: மயிலாடுதுறை அணி
வெற்றி பெற்ற அணிகளுக்கு செந்தலைநியூஸ்  சார்பாக வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்