தஞ்சாவூரில் 108 ஆம்புலன்ஸ் ஆட்கள் சேர்ப்பு தேர்வு முகாம்

தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் 11 தேதி தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 11ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள 108 அலுவலகத்தில் வரும் 11ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. 

ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு:-

ஓட்டுநருக்கு உண்டான கல்வித் தகுதி , பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரம் 162. 5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15, 235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். 

தேர்வு முறை:

1. எழுத்து தேர்வு,  
2. தொழில்நுட்பத் தேர்வு 
3. மனிதவளத்துறை நேர்காணல் 
4. கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு 
5. சாலை விதிகளுக்கான தேர்வு. அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். 

மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பின்வருமாறு:-

BSc Nursing, GNM, ANM , DMLT (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது life science BSc Zoology , Botany, Bio- Chemistry , Micro biology , Bio technology இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் மாதம் ஊதியம் ரூபாய்15, 435(மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்

தேர்வு முறை

1. எழுத்துத் தேர்வு 
2. மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை
3. மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு. இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும் மேலும் விவரங்களுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்