கோவையில் லூலூ ஹைபர் மார்க்கெட் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னைக்கு அடுத்தாக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய நகரமாக விளங்கும் கோவையில் அடுத்தடுத்து பல முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருவதோடு, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புகழிடமாக மாறி வருகிறது.
லூலூ மால் என்றாலே பிரம்மாண்டம், ஒரே இடத்தில் அனைத்து விதமாக பொருட்களும் கிடைக்கும் இடம், பஞ்சமே இல்லாத பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை தான் நினைவில் தோன்றும். இவை கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி வளைகுடா நாடுகளில் முக்கிய அடையாளமாக திகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்க்கெட்களை கொண்டு வர திட்டமிடப்பட்டது.
இதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது யூசுப் அலியின் லூலூ குரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். முதலில் கோவையிலும், அடுத்ததாக சென்னையிலும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடப்பாண்டிலும், சென்னையில் 2024ஆம் ஆண்டு இறுதியிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது.
கோவையில் கடந்த ஆண்டே பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். கோவை லக்ஷ்மி மில்ஸ் வளாகத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கோவையில் ஏற்கனவே பல மால்கள் இருந்தாலும் லூலூ ஹைபர் மார்க்கெட்கள் தனி ரகம். அதாவது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் குரோசரி சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றின் இணைப்பே ஹைபர் மார்க்கெட் என்று சொல்லப்படுகிறது.
தற்போது எந்த நிலையில் லூலூ மால் இருக்கிறது என்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரிதும் வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்து மேற்கத்திய நாடுகளில் இருப்பது போல மிகவும் சிறப்பான முறையில் கட்டப்பட்டு வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.