திருவாரூரில் தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹாலை போன்ற மணிமண்டபத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்த சேக்தாவூது -ஜெய்லானி பீவி அம்மாள் தம்பதியின் மகன் அமீருதீன். இவர் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். தாய் தந்தை இருவர் மீதும் அளவுகடந்த பாசம் கொண்ட இவர் அவர்களது பெயரில் தனது சொந்த கிராமத்தில் தொடர்ந்து ஏழை எளியோருக்கு உதவிகள் செய்து வந்திருக்கிறார்.
இதனிடையே தந்தை மறைந்து 20 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் தாயார் ஜெய்லானி பீவி அம்மாள் கடந்த 2020ஆம் காலமானார். இதையடுத்து அவரது பெயரில் அம்மையப்பன் கிராமத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் 8,000 ஏக்கர் சதுர அடியில் பிரம்மாண்ட மணிமண்டபம் ஒன்றை கட்டியிருக்கிறார் தொழிலதிபர் அமீருதீன். பார்ப்பதற்கு தாஜ்மஹாலை போன்றே காணப்படும் இந்த மணிமண்டபம் முழுக்க முழுக்க ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டதாகும். இதனை சாதி மதம் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவலாகும்.
மணிமண்டபத்துடன் சேர்த்து மதரஸா, பள்ளிவாசலையும் கட்டியுள்ளார் அமிருதீன். இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இக்கட்டிடத்தை பார்க்கும் போது வளைகுடா நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. பெற்றோரை முதியோர் இல்லத்தில் தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில் தாயாருக்காக தாஜ்மஹால் கட்டக் கூடிய பிள்ளைகளும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.