ஐக்கிய அரபு நாடுகளிலும், கேரளாவிலும் பிரபலமான லூலூ மால் கோயம்புத்தூரில் துவங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் இதை இந்நகரத்தின் மிகவும் பிரபலமான லட்சுமி மில்ஸ் கட்டிடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வந்தது.
சில வாரங்களுக்கு முன்பு புதிய லூலூ மால் கட்டிடத்தின் புகைப்படம் வெளியாகி மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த புதிய மால் நாளை ஜூன் 14ஆம் தேதி மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூர் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் புதிய ஷாப்பிங் பகுதி கிடைத்துள்ளது. சமீபத்தில் லூலூ மால் பெங்களூரில் திறக்கப்பட்டு மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது, குறிப்பாக இங்கு விற்பனை செய்யப்படும் தந்தூரி சிக்கன், கேக் மற்றும் பிற உணவு பொருட்கள் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
மேலும் பெங்களூர் லூலூ மாலில் மீன், கோழி, ஆட்டு இறைச்சி விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படும் வேளையில் இதெல்லாம் கோயம்புத்தூர் லூலூ மால்களிலும் இருக்குமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் உள்ளது. தமிழ்நாட்டின் முதல் லூலூ மால் கோயம்புத்தூரில் அமையும் வேளையில் விரைவில் சென்னையில் மற்றொரு மால் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.