தஞ்சாவூரில் அரசுப் பொருள்காட்சி நாளை (செப்.10) தொடக்கம் !

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் மாநகராட்சி திடலில் நாளை 10.09.2016 செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசுப் பொருட்காட்சி தொடங்குகிறது.  தஞ்சாவூர் மாவட்ட பொது  மக்கள்  அனைவரும் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.அண்ணாதுரை அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

10.09.2016 நாள மாலை புதிய பேருந்து நிலையம் மாநகராட்சி திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசுப் பொருட்காட்சி தொடக்க விழா நடைபெற உள்ளது.  வேளாண்மை துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் தலைமையேற்க உள்ளார்கள்.  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர்ர்ராஜீ அவர்கள் பொருட்காட்சியை தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்ற உள்ளார்கள். 

இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் .கு.பரசுராமன், ஆர்.கே.பாரதிமோகன், சட்ட மன்ற உறுப்பினர்கள் .சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி) மாண்புமிகு மாநகர மேயர் திருமதி.சாவித்திரி கோபால். மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சதய விழாக்குழு தலைவர் எம்.ரெங்கசாமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்   ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அரசுப் பொருட்காட்சியில் அரசின் சாதனைகளை விளக்கும் 34 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.  சிறுவர்கள் மகிழ பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தின் உள்புறம் அமைக்கப்பட்டுள்ள அண்ணா கலையரங்கில் தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அரசுப் பொருட்காட்சி நாளை (10.09.2016) தொடங்கி 45 தினங்கள் தொடர்ந்து நடைபெறும்.  நாளை 10.09.2017 மாலை 4.00 மணியளவில் திருவையாறு இசைக்கல்லூரி மாணவர்களின் மங்கள இசை, ராஜ கீர்த்தனை ஆர்க்கெஸ்ட்ராவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
     
தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்