ஆதார் அட்டையால் தனிமனித சுதந்திரம் பறிப்பு ?

ஆதார் அட்டையால் தனி மனித சுதந்திரம் பறிப்பா?
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் என்ற அடையாள அட்டை திட்டம் கொண்டுவரப்பட்டு விரைவாக செயல்படுத்தியது, இதனை அன்று பாஜக அரசும் மற்ற கட்சிகளும் கடுமையாக எதிர்த்தனர். ஆதார் அட்டை தனி மனித விபரங்களை களவாடகூடியது என கூறிய அதே பாஜக அரசு இன்று அதே திட்டத்தை முன்பை விட வேகமாக செயல்படுத்துகிறது. ஆதார் என்பது வெறும் அட்டையல்ல. தனி நபரின் அனைத்து விபரங்களையும் சேகரிக்ககூடிய 12 இலக்க எண்ணாகும். மக்களின் விபரங்களை சேகரித்து அதன் மூலம் தனி நபரின் உரிமையும், அடமானம் வைக்ககூடியதாக மாறும்.
ஆதார் அட்டையை காட்டாயமாக்கும் திட்டதிற்கு எதிர்த்து மனு தாக்கல் ஒன்று வந்தது இதற்கு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு “ குடிமக்களின் தனிப்பட்ட விபரங்களை சேகரிப்பது உரிமை மீறல் அல்ல. அதேபோல் அவர்களின் விபரங்களை பாதுகாப்பதும் அடிப்படை உரிமை அல்ல. இத்திட்டத்தின்படி விபரங்களை சேகரிப்பதை பற்றி கேள்வி எழுப்பகூட உரிமை இல்லை” என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

எனவே அரசு செயல்படுத்தும் திட்டத்தை பற்றி கூட கேள்வி கேட்க உரிமை இல்லையென்றால் ஜனநாயகம் எங்கே சென்று விட்டது. ஆதார் அட்டையின் கீழ்  தனிநபரின் விபரங்களை சேகரித்து யாருக்கு கொடுக்க போகிறது இந்த அரசு. தனி நபர் விபரம் ஏன்?? இது போன்ற விபரங்களை வைத்து ஒரு மனிதனை தீவிரவாதியாகவும் ஆபத்தானவர்களாவும் மாற்ற முடியும் , அரசின் கண்காணிப்பின் கீழ் தனிநபர் விபரம் அவர்களின் அந்தரங்கத்தை வெளிப்படையானதாக கூட மாறும். எனவே மாணவர்களே பொதுமக்களே இது போன்ற அரசின் செயல்பாடுகளுக்கு நாம் வாய் மூடி இருந்தால் நம் வீட்டின் படுக்கையறையில் கூட கேமரா வைக்க திட்டம் கொண்டு வருவார்கள், ஆதார் அட்டை என்பது தனி மனித சுதந்திரத்தையும் பறிக்ககூடியதாக மாறும்.
நன்றி: ரியாஸ் அஹ்மது (கேம்பஸ் ஃப்ரண்ட் மாநிலச் செயளாலர்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்