தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து வருகிறது.
அக்டோபர் 17 மற்றும் 19-ந்தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும். அதன் பிறகு தேர்தல் கமிஷன் தேர்தல் அட்ட வணை வெளியிடும்.
இதற்கிடையே ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதிகள், கட்டுப்பாடுகள், மனுதாக்கல் போன்ற அனைத்து விவரங்களையும் தேர்தல் கமிஷன் கையேடாக அச்சடித்து நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நான்கு வகை வாய்ப்புகள் உள்ளன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களில் ஏதாவது ஒன்றில் போட்டியிடலாம்.
ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகிய ஒவவொரு பிரிவிலும், ஒவ்வொரு பதவியிலும் குறிப்பிட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை குறித்த விவரங்கள் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரால் வெளியிடப்படும்.
நடப்பு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் அப்பகுதிக்கு தொடர்புடைய கிராம ஊராட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற தகுதியுடையவராவார்.
எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட விரும்புகின்றீர்களோ, அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், அந்த மாவட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியிடத்திற்கோ அல்லது உறுப்பினர் பதவியிடத்திற்கோ போட்டியிட்டால் அந்த பதவியிடம் எந்த பிரிவினருக்கு (வகுப்பினர் அல்லது பெண்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினைச் சார்ந்தவராகவோ அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ இருத்தல் வேண்டும்.
தேர்தலில் போட்டியிடுவோர் உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அல்லது அரசு சார்புடைய நிறுவன பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது மத்திய, மாநில அரசு அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கக் கூடாது.
இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற வராக இருக்கக் கூடாது.
மேலும், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளன்று 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 37 (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ், ஒருவர் நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின் அத்தகைய தண்டனை தீர்ப்பானது அபராதம் மட்டுமிருப்பின் - குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
அந்த தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார்.
இது தவிர வேறு ஏதேனும் குற்ற செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத் தண்டனை அடைந்தவர், அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார்.
பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியிருனருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிடங்களில் அவ்வகுப்பைச் சாராதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்படி சட்டப்பிரிவு 38 (3) இ-ன்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார்.
மனநலம் குன்றியவராக இருக்கக் கூடாது.
பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்துள்ளவராகவோ அல்லது உரிய நீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது.
நீங்கள் எந்த ஊராட்சியில் உறுப்பினராக அல்லது தலைவராகப் போட்டியிட விரும்புகிறீர்களோ அந்த ஊராட்சியுடன் மற்றும் எந்த ஒரு வேலைக்கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக் கூடாது.
ஊராட்சியின் சம்பளம் பெறும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ அல்லது ஊராட்சிக்கு எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ பணியமர்த்தப்படடிருக்கக் கூடாது.
முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு கொடுக்க வேண்டிய எந்த வகையான நிலுவையும் வைத்திருக்க கூடாது. தேர்தல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்க கூடாது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதற்கான தேர்தல் செலவினக் கணக்குகளை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின், அத்தகைய தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார்.
பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியின் வேட்பாளராகவோ அல்லது சுயேட்சை வேட்பாளராகவோ இருந்தால் அத்தேர்தலுக்கென அறிவிக்கப்பட்ட சின்னங்களில் மூன்று சின்னங்களை உங்கள் விருப்பத்திற்கிணங்க வரிசைப்படுத்தி கோரலாம். தாக்கல் செய்யப்படும் முதல் வேட்பு மனுவில் குறிப்பிடப்படும் சின்னங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட வைப்புத் தொகையை ரொக்கமாக செலுத்தியோ அல்லது ஊராட்சி ஒன்றிய கருவூலத்தில் செலுத்தி பெறப்பட்ட செலுத்துச் சீட்டுடனோ வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வைப்புத் தொகையில் சலுகை உண்டு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தவிர்த்த ஏனைய வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.200, கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் -ரூ.600, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் -ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் -ரூ.1000 என வைப்பு தொகை செலுத்த வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் கிராம ஊரராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு -ரூ.100, கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் -ரூ.300, ஊராட்சி ஒன்றிய வாரடு உறுப்பினர் தேர்தல் -ரூ.300, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் -ரூ.500 என வைப்பு தொகை செலுத்த வேண்டும்.
ஒரு பதவியிடத்திற்கு எத்தனை வேட்பு மனு தாக்கல் செய்தாலும் ஒரே ஒரு வைப்புத் தொகை மட்டும் செலுத்தினால் போதுமானது.
இதுபோல் தேர்தலில் மனுதாக்கல் தொடங்கி ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வேட்பாளர்கள் கடைப் பிடிக்க வேண்டிய அனைத்து விதிமுறைகள் பற்றியும் கையேட்டில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.