இந்தியா

டெல்லி அருகே குர்கானில் உள்ள எம்.ஜி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் காலை பிங்கி (வயது 22) என்ற இளம்பெண் ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஜிஜேந்திரா (25) என்ற வாலிபர் பிங்கியை தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். அங்கு இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி அந்த பெண் உயிர் இழந்தார். விசாரணையில் பிங்கி திருமணமானவர் என்பதும் அவர் மேகாலயா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ஜிஜேந்திராவை அங்குள்ள பாதுகாப்பு போலீசார் உடனடியாக பிடித்து குர்கான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்