ஜி-சாட் செயற்கைகோள் வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது

சென்னை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ). தொலைதொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக ‘ஜிசாட்–18’ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கை கோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தில் இந்த செயற்கை கோள் பிரதிபலிக்கும் சோதனை, சூரியசக்தி சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடந்து வந்தது. இதனைத்தொடர்ந்து இந்த செயற்கைகோள் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் (இந்திய நேரம்) விண்ணில் செலுத்தப்பட்டது.முன்னதாக நேற்று இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால், அங்கு ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால் இன்று ஏவப்பட்டது கவனிக்கத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்