.அக்டோபர்.. இது அக்டோபர்




‘அ க்டோ’ என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘8’ என்பது பொருள். இருப்பினும் 10–வது மாதமாக பிறக்கும் அக்டோபருக்கும் 8–க்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டால், அதற்கு நம்முடைய காலண்டர் முறைகளே விளக்கமாக அமைகின்றன. ஏனெனில் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்கள்  ஆங்கில காலண்டர் முறையிலே இணைக்கப்பட்டன. அதற்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட ரோமானியா காலண்டரில் அக்டோபர் 8–வது மாதமாகவே பிறந்திருக்கிறது. புதிதாக இணைக்கப்பட்ட இரண்டு மாதங்களால் அக்டோபர் 10–வது மாதத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.புல்லட் ரெயில் (அக்டோபர் 1)

இன்றைய இயல்பான போக்குவரத்தாக மாறிப்போன புல்லட் ரெயில், முதன்முதலில் இயக்கப்பட்டது அக்டோபரில் தான். 1964–ம் ஆண்டு, ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இயக்கப்பட்ட இந்த புல்லட் ரெயில் 4 மணி நேரத்திற்குள் ஒசாகாவை அடைந்து சாதனை படைத்தது.ஐ–பாட் (அக்டோபர் 23)

இன்றைய இளசுகளின் காதுகளை அலங்கரித்திருக்கும் ஐ–பாட் இசைக் கருவியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியதும், அக்டோபரில் தான்.விடுதலை விளக்கு (அக்டோபர் 28)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமையப்பெற்றிருக்கும் ‘லிபர்ட்டி சிலை’, அக்டோபர் மாதத்தின் (28–10–1886) இறுதியில் தான் ஒளி வீசியது.  விண்வெளி சாகசம் (அக்டோபர் 29)

அமெரிக்காவின் போர் விமானியான ஜான் ஹெர்சல் கிளனின் இடைவிடாத ராணுவ பணியை கவுரவப்படுத்தும் விதமாக, அவரது 77–வது வயதில் விண்வெளிக்கு பறந்து சென்றார். வயதானோர் விண்வெளிக்கு சென்று வந்தது அதுவே முதல்முறை.

இவையின்றி ஹாலோவன் திருவிழா, டீ–கப் திருவிழா என உலகில் பல்வேறு மூலைகளில் வித்தியாசமான திருவிழாக்கள் நடைபெறுவது அக்டோபரில் தான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்