2018 ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி

ரியாத்,

2018 ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் சினிமா தியேட்டர்களுக்கு தடை இருந்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அவ்வாட் அலாவட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் அடுத்தாண்டு முதல் சவுதி அரேபியாவில் திரைப்படங்கள் திரையிட அனுமதி வழங்கப்படும். மேலும் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்க புதிதாக ஓர் அமைப்பை உருவாக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 300 சினிமா தியேட்டர்களைத் திறக்கவும், அதன்மூலம் 2,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வாட் அலாவட் , சவுதியில் முதல் சினிமா தியேட்டர் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்படும். பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை ஆகிய காரணிகளின் அடிப்படையில் சினிமாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்