2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்ய காரணம் இதுதான்

டெல்லி:
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நீதிமன்றம் விளக்கியுள்ளது
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அப்போது சிபிஐ சுமத்தியது கற்பனையான குற்றச்சாட்டு என்றும், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.
இதன் மூலம், இத்தனை ஆண்டுகாலமாக ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, இந்த வழக்கு நடைபெற்று வந்துள்ளது, பொது வெளியில் இப்படி தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்