ஜனவரி 31 முதல் 6 மாநிலங்களில் ஏர்செல் சேவை கிடையாது

தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் ஜனவரி 30-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தான் அளித்து வரும் டெலிகாம் சேவையினை நிறுத்தி விடும் என்று கூறியுள்ளது.

இந்த 6 மாநிலங்களிலும் பிற நெட்வொர்க்குடன் போட்டிப்பொர்ரு சேவை வழங்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் எனவே வாடிக்கையாளர்களை வேறு நெட்வொர்க்குகளுக்கும் மாறுமாறும் கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.

மேக்சிஸ்

மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏர்செல் நிறுவனம் புதன்கிழமை டிராயிடம் 6 மாநிலங்களின் சேவை உரிமையினைப் புதுப்பிக்காமல் திருப்பி அளிக்க இருப்பதாகக் கூறியதை அடுத்து டிராய் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

6 மாநிலங்கள்

ஏர்செல் சேவை குஜராத்,
மகாராஷ்டிரா,
ஹரியானா,
ஹிமாச்சல் பிரதேஷ்,
மத்திய பிரதேசம்
மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு

ஆகிய இடங்களில் அளித்து வந்த டெலிகாம் சேவையில் இருந்து ஏர்செல் நிறுவனம் பின் வாங்குகிறது
Jio சேவையால் சில நிறுவனங்கள் அடி வாங்கின என்பதுதான் உன்மை

தமிழக வாடிக்கையாளர்கள்

 6 சர்கிள் தவிரத் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் ஏர்செல் டெலிகாம் சேவையினைப் பயனப்டுத்துபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. சேவைத் தொடர்ந்து அளிக்கப்படும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்கு ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்