டெல்லி:
மூன்றரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு விளம்பரங்களுக்காக மட்டும் 3 ஆயிரத்து 755 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வர் என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவலை கோரி இருந்தார்.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலில், 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை, விளம்பரங்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு 1,754 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரத்து 616 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்னணு ஊடகங்களுக்கு 1,656 கோடியும், விளம்பரப் பதாகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றிற்காக 399 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தொகையானது முக்கிய துறைகள் மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்படுவதை விட அதிகம் ஆகும்.
ஒரு வேலை உணவு இல்லாமல் சில மக்கள் இருக்கும் நம் நாட்டில் இது தேவையா. ?
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.