இந்த நிலையில் ஆஸ்கார் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசை உள்பட ஒருசில பிரிவுகளுக்கு இந்த படம் போட்டி போட்டது என்பதும் தெரிந்ததே. இந்த தகவல் வெளியானதை அடுத்து சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர்
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களில் ஒன்றாக ’சூரரைப்போற்று’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஆஸ்கார் விருதை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதும், வரும் மார்ச் 15-ம் தேதி ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெறும் படங்களின் அடுத்த பட்டியல் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அந்த பட்டியலில் ’சூரரைப்போற்று’ இடம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
We are elated and thrilled!!! #SooraraiPottru joins OSCARS!!!https://t.co/JEDGgDWdZ9#SooraraiPottru🔥@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @deepakbhojraj @thanga18 @guneetm
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 26, 2021
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.