இறைச்சிக்காக, பசு உள்ளிட்ட கால் நடைகளை விற்பதற்கு தடை சட்டம் வாபஸ்

புதுடில்லி:

பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இறைச்சிக்காக, பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை, மத்திய அரசு திரும்ப பெற்றது.
இறைச்சிக்காக, பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு தடை விதிக்கும் அரசாணையை, மே மாதம், மத்திய அரசு பிறப்பித்தது; இதற்கு, பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த அரசாணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்க்கும் வழக்கும், உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.

இதற்கிடையே, மத ரீதியில் இந்த உத்தரவு பிறப் பிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் செய்ய பட்டன. 'பசுஉள்ளிட்ட கால்நடைகளை, இறைச்சிக்காக விற்பது குறித்து, மக்களிடம் கருத்து கேட்கப் பட்டு உள்ளது. எதிர்ப்பு இருந்தால், அதைத் திரும்பப் பெறவும் தயாராக உள்ளோம்' என, உச்ச நீதிமன்றத் தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே, நாடு முழுதும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து, இந்த தடை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்