சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தினகரன் முன்னிலையில் உள்ள நிலையில் பல்வேறு கட்சியினரும் தேர்தல் முடிவு குறித்த தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்
தேர்தல் முன்னிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தாம் ஏற்கனவே கூறியதைப் போல ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டதாக கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்து வரும் ராமதாஸ், திராவிட கட்சிகள் பணநாயகத்தை வளர்த்து தமிழகத்தை அழிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
ஆளுங்கட்சியினர் தினகரனின் முன்னிலை வகித்து வருவதை சீர்குலைக்கும் விதமாக வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பதிவு செய்துள்ள அவர், செய்தி சேகரிக்கப்படும் பத்திரிக்கையாளர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலில் பணபலத்தையும், பின் படைபலத்தையும் ஆளுங்கட்சியினர் காட்ட துடிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. வன்முறையாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.