ஓராண்டுக்குப் பிறகு அறிவாலயம் வந்த கலைஞர்

சென்னை,
டிச.16 திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவால யத்துக்கு, கட்சித் தலைவர் கலைஞர் வெள்ளிக்கிழமை (15.12.2017) இரவு திடீரென சென்றார். அங்கு கட்சி நிர்வாகி களுடன் சிறிது நேரம் பேசிய அவர், வருகைப் பதிவேட்டிலும் கையெழுத் திட்டார். பின்னர் அவர் தனது இல்லத் துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

உடல்நலம் காரணமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்த திமுக தலைவர் கலைஞர், ஓராண்டுக்குப் பிறகு அண்ணா அறிவால யத்துக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) இரவு வந்தார். கலைஞர் உடல்நலத்துடன் இருந்த நாள்களில் காலையும் மாலையும் அறிவாலயத்துக்கு வருவதை அவர் வழக்க மாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், உடல் நலிவுற்ற பிறகு கடந்த ஓராண்டாக அறிவாலயம் வராமல் இருந்த கலைஞர் வெள்ளிக்கிழமை இரவு 8.50 மணியளவில் திடீரென வந்தார். கலைஞரை அவரது அறைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன் மைச் செயலர் துரைமுருகன் ஆகியோர் அழைத்துச் சென்றனர். கலைஞரை அவரது அறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு புறப் பட்டுச் சென்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மகள் செல்வி ஆகியோரும் கலைஞருடன் வந்தனர். தனது கொள்ளுப்பேரன் திருமணத்தையும் அண்மையில் நடத்தி வைத்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் திமுகவின் முப் பெரும் விழா, அறிவாலயத்தில் நடை பெற்றது. அதில், பங்கேற்ற கலைஞர் ஓராண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் அறிவாலயம் வந்து சென்றார்.

கருவியை அகற்றப் பரிசீலனை: கலைஞருக்கு சுவாசத்தை சீராக்குவதற்காக “டிரக்யாஸ்டமி’ கருவி பொருத்தப்பட் டுள்ளது.

கலைஞர் உடல்நலம் தேறியுள்ள நிலையில் அந்தக் கருவியை அகற்றுவது குறித்தும் மருத்துவர்கள் ஆலோசித்து வரு கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்