இந்தியாவிலுள்ள இந்துக்கள் பாஜகவையே ஆதரிக்கிறார்கள். அதனால் இந்தியா முழுவதும் இந்துத்துவமாக மாறிவருகிறது என்ற தோற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறது.
உண்மை அதுவல்ல...
1. ஒரு தொகுதியில் ஆயிரம் ஓட்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த தொகுதியில் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம்.
முதல் வேட்பாளர் 201 ஓட்டு பெறுகிறார்.
இரண்டாவது வேட்பாளர் 200 ஓட்டு பெறுகிறார்.
மூன்றாவது வேட்பாளர் 200 ஓட்டு பெறுகிறார்.
நான்காவது வேட்பாளர் 200 ஓட்டு பெறுகிறார்.
ஐந்தாவது வேட்பாளர் 199 ஓட்டு பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
இந்த ஐந்து வேட்பாளர்களில் 201 ஓட்டு பெற்ற முதல் வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்று அறிவிக்கப்படும்.
ஆயிரம் வாக்காளர்களில் 201 பேர் விரும்பியவர்களை பார்க்கும் இந்திய தேர்தல் முறை அவரை எதிர்த்து 799 பேர் வாக்களித்துள்ளார்கள் என்பதை பார்ப்பதில்லை.
இங்கே 201 என்பது பாஜக 799 என்பது மதச்சார்பற்ற கட்சிகள்.
மதச்சார்பற்ற கட்சிகள் பிரிந்து பிரிந்து கிடப்பதே மதவாத பாஜக வெல்வதற்கு வாய்ப்புகளாக அமைகிறது.
2. தொடர்ச்சியாக இரண்டு முறை ஒபாமா ஆட்சியமைத்ததால் மூன்றாவது முறையாக மாற்றத்திற்காக மக்கள் டொனால்ட் டிரம்பை ஆதரித்தார்கள். தொடர்ச்சியாக இரண்டு முறை காங்கிரஸ் ஆட்சியமைத்ததால் மூன்றாவது முறையாக மாற்றத்திற்காக மக்கள் பாஜகவை ஆதரித்தார்கள். மத்தியில் பாஜக ஆட்சியில் அமைந்து விட்டதால் மாநில தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற்றால் தங்களது மாநிலத்திற்கு சலுகை கிடைக்கும் என்பதால் மாநிலத்திலும் பாஜக வெற்றி பெற்று வருகிறது.
3. பாபர் மஸ்ஜித் முதல் இட ஒதுக்கீடு வரை ஆயிரக்கணக்கான விசயங்களில் முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து முதுகில் குத்திய கட்சி காங்கிரஸ்.
இதனால் காங்கிரஸ் மீது முஸ்லிம்களுக்கு எவ்வித நேசமும் இல்லை. இதனால் காங்கிரஸ் வந்தால் என்ன பாஜக வந்தால் என்ன, யார் வந்தால் என்ன என்ற மனநிலைக்கு முஸ்லிம்களே வந்து விட்டார்கள்.
பாஜகவை நஞ்சுபோல் வெறுக்கும் முஸ்லிம்களே யார் வந்தால் என்ன நமக்கு எந்த நன்மையும் இல்லை என்ற எண்ணத்திற்கு வரும்போது இந்துக்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
4. இதனை சரி செய்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர விரும்பினால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு விசயத்தில் தெளிவான முறையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உறுதிமொழி அளிக்க வேண்டும். இட ஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தை திருப்திப்படுத்தும்...
பாஜகவுக்கு கூஜா தூக்கும் அத்தனை ஊடகங்களையும் காங்கிரஸ் தம்முடைய பக்கம் இழுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் வேலைவெட்டி இல்லாத 5 ஆயிரம் பாஜகவினரை தேர்வு செய்து அவர்களுக்கு பணத்தை கொடுத்து சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக எழுத வைப்பதைபோல் காங்கிரஸுக்கு ஆதரவாக எழுத வைக்க வேண்டும்.
மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்.
fb. செய்தி. முகநூல் முஸ்லீம் மீடியா
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.