கொச்சி:
முத்தலாக் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அகில இந்திய முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது.
கொச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் குஞ்ஞாலி குட்டி, குடும்ப பிரச்சனையை கிரிமினல் குற்றமாக மாற்றுவது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என்று குற்றம்சாட்டினார். முத்தலாக் குற்றம் புரிந்த முஸ்லீம் ஆணை 3 ஆண்டுகள் சிறையில் அடைத்தால் அவரது மனைவி, குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது என்று அவர் கேள்வி எழுப்பினார்
முத்தலாக் மசோதாவில் பல்வேறு முக்கிய அம்சங்கள் விடுப்பட்டிருப்பதாகவும் அடிப்படைக் கேள்விகள் பலவற்றிற்கு மசோதாவில் பதிலில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
முஸ்லீம் தனிநபர் சட்டத்தை அழித்து பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி இது என்று கூறியுள்ள பி.கே.குஞ்ஞாலி குட்டி, முத்தலாக் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறினால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.