பிளஸ்2 தேர்வு நாளை ஆரம்பம்: 8000 பேர் கொண்ட பறக்கும்படை தயார்!!

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தேர்வில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். காப்பி அடித்தால் கையும்களவுமாக பிடிக்க 8500 பேர் கொண்ட பறக்கும் படையை தேர்வுத்துறை அமைத்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் 6756 பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 792 மாணவ, மாணவியரும், புதுச்சேரியை சேர்ந்த 147 பள்ளிகளை சேர்ந்த 15,142 மாணவ, மாணவியரும் தேர்வில் பங்கேற்கின்றனர். இவர்கள் தவிர, தனித் தேர்வர்களாக 40,682 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழகத்தில் 2894 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 48 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.