சென்னை:
உலகளவில் தட்பவெப்ப நிலை கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. இந்த மாற்றத்துக்கு புவி வெப்பமாகுதல் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றம் இந்திய வானிலையிலும் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மழைக்காலம் முடிந்த பிறகு பிப்ரவரி மாதத்திலும் குளிர்ந்த காற்று காலை மற்றும் மாலை வேளையில் வீசியது.
கடந்த காலத்தை விட குளிர் காலத்தில் கடுமையான பனிபொழிதலும் காணப்பட்டது. கோடைக்காலத்தில் அதிக வெப்பமும், குளிர் காலத்தில் அதிக குளிரும் கூட வாட்டி வதைத்தது.
கோடைகாலத்தை எதிர் நோக்கி வரும் இந்த நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இரவில் கூட உஷ்ணத்தின் தாக்கத்தை உணர முடிகிறது. ஏப்ரல், மே மாதங்களில் தான் கோடையின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடையும்.
இந்த வருடமும் கடந்த ஆண்டுகளை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.