விரைவில் : வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியுடன் இன்ஸ்டாகிராம்.!

தற்சமயம் ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ட்விட்களை சேமித்து வைக்க புதிய புக்மார்க்ஸ் (Bookmarks) எனும் வசதியை அறிமுகம் செயத்துள்ளது அந்நிறுவனம். இந்த புதிய வசதி பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அம்சங்கள் வெளிவரும்

இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி சமீபத்தில் இணையத்தில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் விரைவில் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதுவரை இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ளமுடியும், எனவே விரைவில் வரும் புதிய அப்டேட் பல்வேறு பயனர்களுக்கு உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வெளிவரும் என்று உறுதி செய்யும் வகையில் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் பல மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கால் ஐகான் மட்டுமின்றி, அழைப்புகள் மற்றும் வீடியோ சார்ந்த விவரங்கள் இந்த செயலியில் இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்ள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் ஸ்னாப்சாட் செயலிக்கு மாற்றாக அமைய வாய்ப்புகள் உள்ளது, மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களும் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஐஓஎஸ் பதிப்பில் வீடியோ கால்களுக்கான ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த புதிய அம்சம் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கருத்துரையிடுக

0 கருத்துகள்