உங்க வீட்டு குட்டீஸ்க்கு போலியோ சொட்டு மருந்து - நாளைக்கு தர மறக்க வேண்டாம்!!

சென்னை:
தமிழகம் முழுவதும் 2வது தவணையான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது

குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் வரும் 11ம் தேதி நடைபெறும் இரண்டாம் தவணை போலியோ சொட்டுமருந்து முகாமில் அவசியம் சொட்டுமருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் தவணை போலியோ சொட்டுமருந்து குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு, சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், இரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். சொட்டுமருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 6700 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனவே 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் அவசியம் போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்