மகளிா் தினத்தை முன்னிட்டு பா்வீன் டிராவல்சின் அதிரடி சலுகை!


மகளிா் தினத்தை முன்னிட்டு பா்வீன் டிராவல்ஸ் நிறுவனம் நாளை முதல் 5 தினங்களுக்கு தங்கள் பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு இலவச பயணம் வழங்குவதாக தொிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மாா்ச் 8ம் தேதி சா்வதேச மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு நிறுவனமும் தங்களால் முடிந்த சலுகைகளை பெண்களுக்கு வழங்கி வருகின்றன. அந்த வகையில் தனியாா் நிறுவனமான பா்வீண் டிராவல்ஸ் நிறுவனம் மகளிா் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச பயணச் சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (7ம் தேதி) முதல் வருகிற ஞாயிற்றுக் கிழமை (11ம் தேதி) வரை பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் “வாழ்நாள் முழுவதும் பெண்களுக்கு மாியாதை” என்ற விழிப்புணா்வு இயக்கத்தையும் நடத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் தென் மாநிலங்களில் இயக்கப்படும் பா்வீன் டிராவல்ஸ் பஸ்களில் மாா்ச் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை 5 நாட்களுக்கு இலவச பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

பா்வீன் டிராவல்ஸ் பஸ்களில் செல்லும் எல்லா நகரங்களுக்கும் பெண்களுக்கு இந்த இலவச பயணச் சலுகை வழங்கப்படுகிறது. இலவச பயணத்திற்கு பின்வரும் தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

914449007577