ஆன்லைனில் ஆதார் அட்டையுடன் பான் கார்டை சுலபமாக இணைப்பது எப்படி?


உங்களின் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க சில நாட்களே உள்ளது. இணையத்தின் மூலம் ஆன்லைனிலேயே சுலபமாக இணைக்கலாம்
ஆதார் அட்டையுடன் பான் அட்டையின் எண்ணை இணைக்காதவர்களுக்கு இந்த மாதம் கடைசி 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 
இப்போது உங்களின் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வெறும் இரண்டு நாட்களே உள்ளது. 

வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் உங்களிடம் பான் அட்டை இருந்தால் அதை இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனிலேயே  www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி இணைக்கலாம்.

1, முதலில்
https://www.incometaxindiaefiling.gov.in/homeஎன்ற இணையத்தளத்திற்குள் செல்லுங்கள்.


2, அதில் ஆதாரையும் பான் கார்டையும் இணைக்கும் (link aadhar) ஆப்ஷனுக்கு செல்லவும்,


3, அதில் பான் எண் மற்றும் ஆதார் எண் பதிவிடவும்.

4, உங்கள் ஆதார் அட்டையில் இருக்கும் அதே பெயரை பதிவிடவும் ஒருவேளை உங்கள் ஆதார் எண்ணில் பிறந்த வருடம் மட்டுமே இருந்தால் டிக் பட்டனை கொடுக்கவும்,

5, கேப்சா கோட் ( எண் எழுத்து கலந்த குறியீடு) ஒன்று தோன்றும். அதை டைப் செய்யவும் பின்னர் லிங்க் ஆதார் என்று கொடுக்கவும்.


6, உங்கள் கோரிக்கை ஆதார் சரிபார்ப்புக்காக யுஐடிஏஐக்கு அனுப்பப்பட்டுள்ளது. என்ற தகவல் திரையில் தோன்றும். பின்னர் நிலையைச் (status) சரிபார்க்கவும்.


7, நீங்கள் மீண்டும் ( link aadhar) பட்டனை கிளிக் செய்தால் மேலே (click here) என்ன பட்டனை களிக் செய்து அதில் உங்கள் பான் எண், மற்றும் ஆதார் எண்னை கொடுத்தால் உங்களின் நிலை என்ன என்பதை அரியலாம்.


அவ்வளவு தான் உங்களில் பான் ஆட்டையும் ஆதார் அட்டையும் இணைக்கப்பட்டது. என்ற செய்தி திரையில்தோன்றும்.


தொகுப்பு : (SN. நியூஸ் குழு)

கருத்துரையிடுக

0 கருத்துகள்