ஆலிம்கள், உலமாக்கள் உறுப்பினர்கள் சேர்க்கை - தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!


தஞ்சாவூர் ஆக -30 ஆலிம்கள், உலமாக்கள், மோதினார்கள் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.. 

இதுகுற்த்து கலெக்டர் அண்ணாதுரை அறிவித்துள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் பள்ளிவாசல்கள், மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், முஅதின்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்களுக்காக உலமாக்கள் நலவாரியம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 454 பேர் பதிவு பெற்ற உறுப்பினர்களாக உள்ளனர். இதன் மூலம் பல நலத்திட்டங்களை அவர்கள் பெற்று வருகின்றனர்.

இதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒரு முறையும் புதுப்பிக்கப் பட வேண்டும். ஆனால் பலர் இதுவரை புதுப்பிக்கப் படாமல் உள்ளனர். இதனால் அவர்கள் பெற வேண்டிய பல நலதிட்டங்கள் பெறப்படாமல் உள்ளனர்.எனவே இதனை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் காலை மணி 10 முதல் உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் அட்டை பெறுதல் (ரூ 20 கட்டனம்) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆகியவற்றிற்காக சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே இந்த முகாமில் ஆலிம்கள், உலமாக்கள், மதரஸா ஆசிரியர்கள், ஆசிரியைகள்,பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்