நமது ஊர் பகுதியில் போலீசார் ஹெல்மெட் சோதனை தீவிரம்!!


தமிழகத்தில் 2018 - ம் ஆண்டு ஜனவரி - ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் நடந்த விபத்துகளில் 40 . 53 % இருசக்கர வாகன விபத்துகள்தாம் . இதில் 73 . 14 சதவிகிதம் பேர் தலையில் அடிபட்டே உயிரிழந்திருக்கிறார்கள் .எனவே வாகனங்களில் செல்வோர் உயிரை பாதுகாத்து கொள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் மற்றும் கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பல பகுதிகளில் காவல்துறை ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நமது ஊர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காவல்துறை தீவிர ஹெல்மெட் சோதனையில் மாலை முதல் இரவு 7 மணி வரை ஈடுபட்டுவருகின்றனர்.

எனவே இருசக்கர வாகனங்களில் பயணிக்ககூடிய நமது ஊர் மக்கள் அபராத தொகை கட்டவேண்டும் என்பதற்க்காக இல்லாமல் நம் உயிரை காக்கும் என்பதற்க்காக ஹெல்மெட் அணிந்து பயணத்தை மேற்கொள்ளுமாறு செந்தலைநியூஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்