பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை!


பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இந்த அட்டவனையின்படி மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதிவரை தேர்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 2019- 2020-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்புக்கு மார்ச் 17-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு இரண்டாம் தாள் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தேர்வு அட்டவணை:

27-03-2020 வெள்ளிக்கிழமை - மொழிப்பாடம்

28-03-2020 சனிக்கிழமை - விருப்ப மொழி

31-03-2020-செவ்வாய்கிழமை- ஆங்கிலம்

03-03-2020-வெள்ளிக்கிழமை - சமூக அறவியல்

07-03-2020-செவ்வாய்கிழமை - அறிவியல்

13-04-2020- திங்கள்கிழமை - கணிதம்

மே 4ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்