மும்பை: ஒன்பது வங்கிகளை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் வெளியான தகவலை, ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
பிரபலமான ஒன்பது வங்கிகளை மூட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான உத்தரவை, ரிசர்வ் வங்கி விரைவில் பிறப்பிக்க உள்ளதாகவும், கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கித் துறையை மேலும் பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒன்பது வங்கிகள் மூடப்படவுள்ளதாக, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்; அது, தவறான தகவல். வங்கிகளை மூடும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.