வீடுகளுக்கு கியாஸ் கொண்டு வருபவருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்கள் , அடுக்கு மாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப ரூ . 20 முதல் 100 வரை கூடுதல் கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கின்றனர். இது தொடர்பாக சிலிண்டர் நிறுவனங்களுக்கு புகார் தெரிவித்தும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்து ஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண் ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்பவருக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.
டிப்ஸ் கொடுக்க வேண்டாம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சிலிண்டர்கள் , தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்னரே பொதுமக்களுக்கு வினி யோகம் செய்யப்படுகிறது . சிலிண்டர் வினியோகம் செய்யம் போது ரசீதில் சில்லறை விலை தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும் சில்லரை விலை என்பது வாடிக்கையாளர்களின் சமையல் அறை வரை சிலிண்டரை டெலிவரி செய் வதற்கான தொகையாகும்.
வாடிக்கையாளர்கள் ரசீதில் உள்ள விலைக்கு மேல் டெலிவரி செய்பவருக்கு தொகை எதுவும் கொடுக்க வேண்டாம் . இந்தியன் ஆயில் நிறுவனம் ' டிப்ஸ் ' வழங்குவதை என்றுமே ஆதரிப்பதில்லை .
புகார் செய்யலாம்:
ரசீதில் உள்ள சில்லரை விலைக்கு மேல் தொகை கோரப்பட்டால் வாடிக்கையாளர் இண்டேன் சேவை மையத்தை காலை 9:30 மணி முதல் மாலை 5:15 வரை தொடர்பு கொண்டு புகார் செய்தால் , உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . அதே போல விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இதர புகார்களுக்கு 18002333555 என்ற இலவச எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது .
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.