அதிரையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு.


மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று அதிராம்பட்டினத்தில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டாமும் நடைபெற்றது, அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கோவை செய்யது மற்றும் ஹாரூன் ரஷீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் . 

அதே போல் உலமா சபையின் சார்பில் உலமாக்கள் , அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் பேரணி முன்னதாக தக்வா பள்ளியில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலைய வளாகத்திற்கு வந்தடைந்த பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்