தமிழ்நாட்டில் ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாக வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு அது சரிபார்க்கப்பட்டு தேர்தலும் நெருங்கிவிட்டது. சில கிராமங்களில் கிராம மக்களே போட்டியின்றி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களுக்கான சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து நமது ஊர் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிபெருக்கி விளம்பரம் மற்றும் துண்டுசீட்டு விளம்பரங்கள் மூலம் இரவு பகல் பாராமல் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் கட்ட வாக்குபதிவாக வருகின்ற 30/12/2019 அன்று நமது ஊரில் வாக்குபதிவு நடைபெறுகின்றது.
வாக்குபதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி மாதம் 2 - ந்தேதி நடைபெறும்.,
வாக்குபதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி மாதம் 2 - ந்தேதி நடைபெறும்.,
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.