உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது. என்பது குறித்து , வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படத்தை , மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான , முதற்கட்ட ஓட்டுப்பதிவு நாளை மறுநாளும் , இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு , வரும் , 30ம் தேதியும் நடக்கிறது.
ஊராட்சி வார்டு உறுப்பினர் , ஊராட்சி தலைவர் , ஒன்றிய கவுன்சிலர் , மாவட்ட கவுன்சிலர் என , நான்கு பதவிகளுக்கு , வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும் . இதற்காக , நான்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன .தேர்தல் ஆணையம் இதனால் , வாக்காளர்களிடம் குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.எனவே , எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விளக்கும் வகையில் , விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை , மாநில தேர்தல் ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
* தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள , ' பூத் சிலிப் ' புடன் ஓட்டுப்பதிவு மையங்களுக்கு , வாக்காளர்கள் செல்ல வேண்டும் .
* பூத் சிலிப் கிடைக்காதவர்கள் , ஓட்டுச்சாவடி முன் அமர்ந்திருக்கும் , நிலை அதிகாரியிடம் பெற வேண்டும்.
* ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்து , வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் , பூத் சிலிப்பை , அங்குள்ள அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும்.
* ஆவணங்கள்வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட , 11 ஆவணங்களில் ஒன்றையும் காண்பிக்க வேண்டும்.
* தொடர்ந்து , இடது கை ஆள்காட்டி விரலில் , அழியாத மை வைக்கப்படும்.
* (ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான , வெள்ளை நிற ஓட்டுச்சீட்டு); (ஊராட்சி தலைவருக்கான , இளம் சிவப்பு நிற ஓட்டுச்சீட்டு ); (ஒன்றிய கவுன்சிலருக்கான, பச்சை நிற ஓட்டு சீட்டு) ; (மாவட்ட கவுன்சிலருக்கான , மஞ்சள் நிற ஓட்டு சீட்டுகள் ) , தனித்தனியாக அலுவலர்களால் வழங்கப்படும்.
* பின் , மறைவான பகுதிக்கு சென்று , ஓட்டளித்துவிட்டு , முறையாக மடித்து, ஓட்டுப்பெட்டியில் அவற்றை போட வேண்டும் என , அந்த குறும்படத்தில் விளக்கப்பட்டு உள்ளது .
இதை , சமூக வலைதளங்கள் , 'டிவி ' சேனல்கள் , செய்தி இணையதளங்கள் வாயிலாக பரப்பி , விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை , மாநில தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.