தஞ்சை மாவட்டம் செந்தலைவயல் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7.மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
செந்தலைவயல் ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பாக M.ரகுமத்துல்லா, SDPI கட்சி சார்பாக J. ரியாஸ் அஹமது,
போட்டியிடுகின்றனர்.
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பாக
K.செய்யதுமுகமது, தமிழ் மாநில காங்ரஸ் சார்பாக ஐயப்பன், நாம் தமிழர் கட்சி சார்பாக ரஞ்சித்,சுயேச்சை வோட்பாளர் ரவி,ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 46 ஆயிரத்து 639 பதவிகளை தேர்வு செய்ய இன்று வாக்குப்பதிவு நடத்தப்படகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 2-ம் கட்ட தேர்தலில் 38 ஆயிரத்து 916 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 பஞ்சாயத்து தலைவர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணிவரையில் வாக்காளர்கள் ஓட்டுப் போடலாம்.5 மணிக்கு வரிசையில் நிற்ப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் அவர்கள் காத்து இருந்து ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தேர்தலில் ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள். இதற்காக 25,008 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 315 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்றுவரும் 2-ம் கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குப்பெட்டிகளும் இந்த மையங்களுக்கு இன்று இரவே கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற
2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
புகைப்படங்கள் : AKN.ராவுத்தர்
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.