உள்ளாட்சி தேர்தலில் இதனை செய்தால் உங்கள் ஓட்டு செல்லாது...


ஊராட்சிகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாக வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றது. இதில் வாக்கு சீட்டு முறை பயன்படுத்தப்படுகின்றன. 

வாக்காளர்களுக்கு நான்கு வண்ணங்களில் வாக்கு சீட்டு வழங்கப்படும் இதில் கீழ்காணும் பிழைகள் இருந்தால் உங்கள் வாக்கு செல்லாத வாக்காக கருதப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

* முத்திரை இல்லாத வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும்.


* சின்னத்தில் இல்லாமல் வெற்றிடப் பகுதியில் முத்திரை பதிந்திருந்தால் நிராகரிக்கப்படும்.


* ஒன்றுக்கு மேற்பட்ட சின்னங்களில் முத்திரை பதிவிட்டிருந்தால் நிராகரிக்கப்படும்.


* வாக்குச் சீட்டில் ஏதேனும் குறியீடுகளை குறிப்பிட்டிருந்தால் அதுவும் ஏற்கப்படமாட்டாது.


* கசங்கிய நிலையில் இருக்கும் வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும்.


* வாக்குச் சீட்டு உண்மை தன்மைக்கு மாறாக இருந்தால் அதுவும் ஏற்கப்படாது.

வாக்காளர்கள் தனது வாக்குகளை கவனத்துடன் செலுத்த வேண்டும். இல்லை என்றால் உங்கள் வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.

by . செந்தலை நியூஸ்


கருத்துரையிடுக

0 கருத்துகள்