இந்தியாவில் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 6 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியான நிலையில், மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 10 ஆய்வகங்களில் 107 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தி, கொரோனா உறுதியான மாதிரிகளை மாநில அரசுகள் கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூர், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...
SenthalaiNews WhatsApp group /
Facebook /
Instagram /
ShareChat /
Twitter /
Telegram /
YouTube /
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.