இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி - மத்திய அரசு

பிரிட்டனில் இருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா பரவியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களுள் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், உருமாறிய கொரோனா உறுதியான 6 பேரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அந்த 6 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் பரவி வரும் வீரியமிக்க உருமாறிய கொரோனா வைரஸால், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு டிச.31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டப்பட்டது. அதன் படி, நடத்தப்பட்ட பரிசோதனையில் தற்போது 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்