எல்பிஜி அல்லது சமையல் சிலிண்டர்களுக்கான மானியம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது அந்த மானியத் தொகை உங்களுக்கு வருகிறதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு அது தெரியாவிட்டால் கண்டுபிடிக்க மிகவும் எளிமையான வழி உள்ளது. ஆன்லைன் மூலமாகவே அதை நீங்கள் சரிபார்க்கலாம்.
mylpg.in வலைத்தளத்திற்குச் செல்லவும்.
வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும். அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும். பின்பு அதில் sign in கேட்கும் sign in செய்து உள்ளே செல்லவும். புதிய பயனாளர்கள் Register செய்ய உங்களுடைய மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் தகவல்களை நிரப்பி உள்ளே செல்லவும்.
புதிய துணைப்பக்கம் ஒன்று திறக்கும். பார் மெனுவுக்குச் சென்று ’view cylinder booking history’என்பதைக் கிளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு உங்கள் வங்கி விவரங்கள் புதிய துணைப்பக்கத்தில் வெளியாகும். மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா இல்லையா என்பதை அதில் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
கேஸ் சிலிண்டர் தொடர்பான சந்தேகங்களுக்கு , புகார்களுக்கு யாரிடம் , எப்படி முறையிட வேண்டும் , எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை பெறுவது எப்படி , சிலிண்டர் போடுபவர்களுக்கு டெலிவெரி சார்ஜ் கொடுப்பது அவசியமா போன்ற நம்முடைய அடிப்படை சந்தேகங்களை இந்த Video மூலம் விளக்கிய
தேநீர் இடைவேளை
👇👇👇
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...
SenthalaiNews WhatsApp group /
Facebook /
Instagram /
ShareChat /
Twitter /
Telegram /
YouTube /
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.