இந்த மாவட்டங்களில் இன்று துவங்கி 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ...

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதேபோல் நாளை, நாளை மறுதினம் ( 30 ம்தேதி ) தென் தமிழகம் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் , தெற்கு உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
31 - ந்தேதி ( வியாழக்கிழமை ) தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்