இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் காலமானார்!

இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் மிகவும் பரிட்சையமானவர். ஒரே நாளில் எட்டாத தமிழர்களுக்கு எட்டா கனியாக இருந்த ஆஸ்கர் விருதை ஒன்றல்ல, இரண்டை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். இசை குடும்பத்தை சேர்ந்த ரஹ்மானின் தந்தை இறந்துவிட அவரை சிறுவயது முதலே அரவணைத்து வளர்த்து வந்தவர் அவரின் தாயார் கரீமா. தனது அம்மா தான் தனக்கு சூப்பர் ஸ்டார் என்று சொல்லியுள்ள ஏ.ஆர். ரஹ்மான், நாம் எடுக்க தயங்கும் பல அற்புதமான முடிவுகளை அவர் எடுப்பதைப் பார்த்துள்ளேன். அவர் மிகவும் துணிச்சலானவர் என்று பல முறை கூறியுள்ளார் ரஹ்மான்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்