சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னையிலிருந்து கொச்சி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னையிலிருந்து கொச்சி செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று மாலை 6.30 மணிக்கு 81 பயணிகளுடன் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி அமா்ந்தனா். விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கும்போது விமானத்தில் திடீா் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுப்பிடித்தாா். இதையடுத்து விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டு, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து விமானம் மீண்டும் அது நிற்கவேண்டிய இடத்திற்கே கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. விமான பொறியாளா்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய முயன்றனா். ஆனால் உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு கூடத்தில் அமரவைக்கப்பட்டனா். அதன் பிறகு மாற்று விமானத்தில் பயணிகளை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 81 பயணிகள், 5 விமான ஊழியா்கள் உட்பட 86 போ்  உயிா் தப்பினா்.

எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்