தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை பதிவு செய்தவர்கள் உள்பட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதுவரை, ஒட்டுமொத்தமாக 12 லட்சத்து 80 ஆயிரத்து 110 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது நடக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற அனைத்து திருத்தப் பணிகளும் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்த நடவடிக்கை, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் முக்கிய செயலாகும். இதுவரை இந்த காலகட்டத்தில் கிடைத்த விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து, பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் நேற்று வரை நடைபெற்ற எஸ்.ஐ.ஆர். பணிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதில், 9-ஆம் தேதி வரை 6 கோடி 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள் (99.95%) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன; இதில் 6 கோடி 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் (99.55%) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுபவர்கள் மட்டுமே, வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.