உறையவைக்கும் குளிர்- டெல்லியில் 31-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் உறையவைக்கும் குளிரில் தொடர்ந்து 31-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக டிசம்பர் 29-ஆம் தேதி மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், டிசம்பர் 29-ஆம் தேதி காலை காலை 11 மணிக்கு ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ் இந்தியா அமைப்பை சேர்ந்த யோகேந்திர யாதவ், ''மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். டிசம்பர் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை மீது சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும்'' என்று கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்