இன்றைய பதிவில் நாம் QR Code என்றால் என்ன ? அதன் பயன்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
1D Barcode – நாம் கடைகளுக்கு சென்று பொருள் வாங்கும் போது பில் போடுபவர் கையில் ஒரு ஸ்கேனரை வைத்து Barcode ஐ ஸ்கேன் செய்வார். உடனடியாக அதன் விலை பில்லில் சேர்ந்துவிடும். அப்போது ஸ்கேனரில் இருந்து சென்று எதிரொளிக்கும் ஒளியினை Barcode இல் இருக்கும் கறுப்பு நிற கோடுகள் இடைமறிப்பு (intercept) செய்யும். இதில் குறைந்த அளவிலான தகவலை மட்டுமே உள்ளீடு செய்ய முடியும். நாம் இதற்க்கு முன்னர் பயன்படுத்திய BAR CODE இல் உள்ள குறைபாடுகளை களைவதற்காக கொண்டுவரப்பட்டதுதான் QR Code.
QR Code ஐ நீங்கள் அதிகப்படியான இடங்களில் பார்த்திருக்கக்கூடும். பொதுவாக இந்த QR Code- ஐ பெட்ரோல் பங்குகளில் பணம் செலுத்தும் இடத்திலோ , கடைகளில் இருக்கும் பொருள்களிலோ , வாட்ஸ்அப் , டெலெக்ராம் போன்றவற்றை கணினியில் ஓபன் செய்யும் போதோ , அல்லது ஏதாவது App- ஐ பயன்படுத்தும் போதோ கண்டிப்பாக QR Code- ஐ பார்த்திருப்பீர்கள். மேலும் QR Code -ஐ நீங்கள் ஆதார் கார்டு , ரேஷன் கார்டுகளில் கூட பார்த்திருப்பீர்கள். இந்த QR Code- யில் நிறைய தகவல்கள் இருக்கும். ஆனால் அது நம் கண்களுக்கு தெரியாது. QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாக மாறிவிட்டது. இவற்றில் உள்ள குறியீடுகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் சதுரங்களின் வரிசையைக் கொண்ட இயந்திரம் படிக்கக்கூடிய குறியீட்டில் இருக்கும்.
இந்த QR Code- யில் இணையதள முகவரி , மின்னஞ்சல் முகவரி , தொலைபேசி இலக்கங்கள் மற்றும் குறுஞ் செய்திகள் போன்றவறை மறைக்குறியாக்கம் செய்யலாம். மறைக் குறியாக்கம் செய்யப் பட்ட தகவல்களைக் கொண்ட இப்படத்தினை இனையம் வழியே பகிரலாம் அல்லது அதனை அச்சிட்டு வன் பிரதியாகவும் ( Hard Copy ) பயன்படுத்தலாம். QR கோடை உருவாக்குவதற்கென மென்பொருள்களும் உள்ளன. அவற்றை இலவசமாகவே இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் மென்பொருள்கள் எதனையும் கணினியில் நிறுவாமலேயே ஆன்லைனிலும் QR கோடை உருவாக்கும் வசதியை பல இனைய தளங்கள் வழங்குகின்றன. அவற்றின் மூலம் இலகுவாக உங்கள் விருப்பத்திற்கேட்ப QR Code படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
QR Code பயன்கள் :
QR Code Image ஆக மாற்றுவதன் மூலம் உங்களுடைய தகவல்கள் அல்லது இணைப்புகள் உங்களுடைய தகவல்கள் QR Code ஆக என்கோட் ( Encode ) செய்யப்பட்டு ஒரு படமாக கிடைக்கும். அப்படத்தை உங்களுக்கு வேண்டிய இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். நண்பர்களுக்கு அனுப்பியும் அவற்றை Decode செய்து பயன்படுத்த முடியும். அதாவது ஒரு தகவலை QR Code ஆக என்கோட் செய்யப்பட்டு கிடைக்கும் படத்தை மீண்டும் ஸ்கேன் செய்து ( டீகோட் Decode ) செய்து , அதில் மறைந்துள்ள தகவல்களைப் பெற முடியும். உங்களுடைய தகவல்கள் தமிழ்மொழி உட்பட எம்மொழியில் இருந்தாலும் , இந்த முறையில் தகவல்களை QR Code ஆக மாற்றி , மீண்டும் தேவையானபோது Decode செய்து பெற முடியும்.
QR Code -ல் இணையதளச் சுட்டிகளை (Websites Link ) வைக்கலாம். குறுஞ்செய்திகளை QR Code ஆக மாற்றலாம். மின்னஞ்சல் முகவரிகள் , வலைத்தள முகவரிகள் , SMS என்பன போன்ற ஐந்து வரிக்கு மிகாமல் இருக்கும் Data- க்களை QR Code படமாக மாற்ற முடியும்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.